Trichy: இன்று (ஜுலை.4) காலை திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த 6 ஊழியர்களின் பயணம், எதிர்பாராதவிதமாக அதேசமயம் கவனக்குறைவின் காரணமாகவும் ரத்தானது.
மலேசியாவின் premium airline நிறுவனமான malindo-வில் 6 தமிழக ஊழியர்கள் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல டிக்கெட் புக்கிங் செய்திருக்கின்றனர். இன்று.. அதாவது ஜுலை 4ம் தேதி காலை 9 மணிக்கு விமானம் அது. Connecting ஃபிளைட்டும் கூட. திருச்சியில் இருந்து கோலாலம்பூர். பிறகு கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இது. டிக்கெட் புக் செய்த பிறகு, தேவையான அனைத்து ஆவணங்களுடன் அவர்கள் இன்று காலை திருச்சி விமான நிலையத்துக்கும் வந்துவிட்டனர்.
ஆனால், அவர்கள் வந்த பிறகு தான், விமானம் புறப்படும் நேரம் ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து malindo airways 6 ஊழியர்களுக்கும் ஏற்கனவே மெயில் மூலம் தகவல் அனுப்பியிருக்கிறது. அதாவது இன்று பிற்பகல் 2 மணிக்கு வேறு விமானத்தில் ஆனால், அவர்கள் சிங்கப்பூர் கிளம்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் பிஸியாக இருந்தார்களோ என்னவோ, 6 பேருமே அந்த மெயிலை கவனிக்கவில்லை.
அனைவரும் கிளம்பி ஏர்போர்ட்டும் வந்துவிட, விமானம் பயண நேரம் மாற்றப்பட்டிருப்பதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இதில் கொடுமை என்னவெனில், சிங்கப்பூருக்கு முதன் முறையாக Work Permit-ல் செல்பவர்கள் கண்டிப்பாக Onboard Centre-ல் 3 நாட்கள் தங்க வேண்டும்.
கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் சிங்கையில் Construction, Marine Shipyard மற்றும் Process Sector-ல் வேலைக்கு வர Work Permit-ல் விண்ணப்பித்திருப்பவர்கள் கட்டாயம் Onboard Centre-ல் தங்க வேண்டும் என மனிதவளத்துறை அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில், இந்த 6 ஊழியர்களும் இன்று இரவுக்குள் சிங்கப்பூர் வந்து, Onboard Centre-ல் தங்கள் வருகையை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில், அவர்கள் Absent என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மாற்று விமானத்தில் அவர்கள் சிங்கப்பூர் சென்றாலும், Cஎன்பதால், onnecting Flight அவர்களால் இன்று இரவுக்குள் சிங்கப்பூர் செல்ல முடியாது. ஆகையால், Onboard Centre-ல் அவர்கள் தங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுவிட்டது.
Onboard Centre-ல் தங்காமல், விமான நிலையத்தை விட்டே அவர்களால் வெளியே வர முடியாது. இதனால், இப்போது அவர்களால் சிங்கப்பூரும் செல்ல முடியவில்லை. Refund கிடையாது என்பதால் விமான கட்டணத்தையும் திருப்பிப் பெற முடியவில்லை. விமான நிறுவனமோ, உங்களுக்கு ஏற்கனவே மெயில் அனுப்பிவிட்டோம் என்ற ஒற்றை வரியில் பதிலை முடித்துக் கொண்டனர்.
இப்போது 6 ஊழியர்களின் டிக்கெட் கட்டணமும் வீணாய் போயுள்ளது. அவர்கள் தாமாகவே டிக்கெட் புக் செய்தார்களா அல்லது ஏஜென்சி மூலம் புக் செய்தார்களா என்பதும் தெரியவில்லை. எனவே, இது போன்ற கடைசி நேர தலைவலிகளை தவிர்க்க வேண்டுமெனில், டிக்கெட் புக் செய்த பிறகு, தொடர்ந்து அப்டேட்டுகளை கவனிக்க வேண்டும். குறிப்பாக, கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் பெருந்தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால், செய்திகள் குறித்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக, Onboard Centre slot-ல் உங்களுக்கான இடத்தை உறுதி செய்யாமல், தப்பித்தவறிக் கூட சிங்கப்பூருக்கு ஃபிளைட் டிக்கெட் புக் செய்திட வேண்டாம்.
News Source:
விமான டிக்கெட் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம், திருச்சி 620 007
97 91 477 360