TamilSaaga

சிங்கப்பூரில் மாதம் 1.75 லட்சம் சம்பளம்… தங்கும் செலவு மாதம் S$600 டாலர்.. புற்றீசலாய் குவிந்த ‘9 லட்சம்’ ஊழியர்கள் – மலேசியாவை விட சிங்கப்பூருக்கே கடும் ‘கிராக்கி’

லட்சக்கணக்கான மலேசியர்கள் வழக்கத்தை விட மிக அதிகமாக சிங்கப்பூரில் வேலை செய்து வருவதாக Malaysian Employers Federation (MEF) தெரிவித்துள்ளது.

MEF தலைவர் சையத் ஹுசைன் சையத் ஹுஸ்மான் வெளியிட்டுள்ள தகவலின் படி, 900,000 ஊழியர்கள் சிங்கப்பூரில் பணிபுரிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது முன்னர் அறிவிக்கப்பட்ட சுமார் 400,000 எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.

உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்களை நாசமாக்கிய தொற்றுநோயைத் தொடர்ந்து மலேசியாவின் பொருளாதாரம் மீள்வதில் ஏற்படுவதில் தாமதம் காரணமாக, பல மலேசியர்கள் வேலை செய்ய சிங்கப்பூருக்குள் குவிவதாக தெரிய வருகிறது.

மலேசிய ஊழியர்கள் சிங்கப்பூரில் வேலைப்பார்க்க விரும்புவதன் மிக முக்கிய காரணம் பணம். அதேசமயம், அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை முறை போன்றவையும் அவர்கள் இங்கேயே அதிக காலம் தங்க வழிவகுக்கிறது.

“சிங்கப்பூரில் உள்ள மேம்பட்ட தொழில்களில் பணிபுரியும் வாய்ப்பு மலேசியர்களுக்கு கிடைப்பது வரப்பிரசாதம் எனலாம். ஏனெனில் அவர்கள் அந்த அனுபவம் மூலம் மலேசியாவில் நல்ல வேலையை பெற முடிகிறது. அதேசமயம், சர்வதேச அளவில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்றும் உயர் பதவிகளில் அமர முடிகிறது” என்று சையது ஹுசைன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க – “Target” வச்சு அவசர அவசரமா வேலை.. Pending Works-ஐ முடிக்குறதுக்காக 27 வெளிநாட்டு ஊழியர்களோட குடும்பம் உயிரை பலி கொடுத்து நிக்குது!

மேலும், “அவர்கள் சிங்கப்பூரில் நல்ல வருமானம் பார்க்கிறார்கள். இது அவர்கள் ஓய்வுபெறும் போது போதுமான சேமிப்பை உறுதி செய்கிறது. எனவே அவர்கள் வருமானத்தை அதிகரிக்க சிங்கப்பூரில் வேலை செய்ய முடிவு செய்கின்றனர்.

அதேபோல் தங்கள் படிப்புக்கு, திறமைக்கு ஏற்ற ஊதியம் மலேசியாவில் கிடைக்கவில்லை என்று மலேசியர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, ஒரு பொறியியல் பட்டதாரி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் RM2,000 பெற்றிருப்பார். தற்போது, இந்தத் தகுதி உள்ள ஒருவருக்கு மலேசியாவில் ஆரம்ப ஊதியம் RM2,800 (S$888) ஆகும்.

இது சிங்கப்பூரில் புதிய பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளத்துடன் ஒப்பிடப்படுகிறது. அதாவது, இங்கு தொடக்கமே S$2,600 (RM8,200) முதல் S$3,100 (RM9,777) வரை ஊதியமாக கிடைக்கிறது. மலேசியாவில் தரப்படும் ஊதியத்தை விட கிட்டத்தட்ட மூன்றிலிருந்து நான்கு மடங்கு அதிகம்.

அதுமட்டுமின்றி, சிங்கப்பூரில் பணிபுரியும் ஒரு மலேசியர், இங்குள்ள ஒரு அறைக்கு மாதத்திற்கு S$500 முதல் S$600 வரை மட்டுமே செலவு செய்கிறார். இதன் மூலம் அவர்களால் ஒரு பெரும் தொகையை வீட்டுக்கு அனுப்ப முடிகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts