TamilSaaga

“Target” வச்சு அவசர அவசரமா வேலை.. Pending Works-ஐ முடிக்குறதுக்காக 27 வெளிநாட்டு ஊழியர்களோட குடும்பம் உயிரை பலி கொடுத்து நிக்குது!

SINGAPORE: இந்த 2022-ம் ஆண்டு முதல் பாதியில் மட்டும் வெளிநாட்டு ஊழியர்கள் பணியிட விபத்தில் இறப்பது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அரசு இதுகுறித்து அக்கறை செலுத்தினாலும், மரணங்களை தடுக்க முடியவில்லை.

எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் கடந்த ஜூன் 22ம் தேதி, காலை 10.15 மணியளவில், காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கூட்டுப் பயிற்சி பெறும் Home Team Tactical Centre அமைந்துள்ள 1 Mandai Quarry சாலையில் பணியிடத்தில் நிகழ்ந்த கிரேன் விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த பெரியசாமி ராஜேந்திரன் எனும் ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இறந்த பெரியசாமி ராஜேந்திரன் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், வரம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இவரது வயது வெறும் 32 மட்டுமே.

சிங்கப்பூரில் தற்போது வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் பணியிடத்தில் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூரில் பணியிடத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. சிங்கப்பூர் 2016-ல் இருந்து மிக மோசமான பணியிட மரணங்களை எதிர் கொண்டு வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர். அவற்றில் 10 பேர் மட்டும் கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழக ஊழியர் பெரியசாமி ராஜேந்திரனின் மரணமும் அடக்கம்.

இந்நிலையில், சிங்கப்பூரில் பணியிட மரணங்கள் அதிகரிக்க கோவிட் நோய்த்தொற்று காரணமாக பணியில் ஏற்பட்ட தாமதமும் ஒரு முக்கியக் காரணம் என்று ஊழியர்களும், நிறுவன நிர்வாகிகளும் தெரிவித்துள்ளனர். அதாவது, தொற்று காரணமாக பணிக்க எதுவும் முடிக்கப்படாமல் பாதியில் நின்ற நிலையில், மீண்டும் எல்லைகள் திறக்கப்பட்டு அனைத்து துறைகளும் இயங்கினாலும், அதனை அவசர அவசரமாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஊழியர்களுக்கு ஏற்பட்டது. அதனால், தான் உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன என்று கூறியுள்ளனர்.

மேலும் படிக்க – இனி 10 லட்சம்.. வெளிநாடுகளில் வசிப்போருக்கு இந்திய அரசின் (FCRA) “Surprise” அறிவிப்பு – யாருமே எதிர்பார்க்காத “Breaking” நியூஸ்

பணியிட பாதுகாப்பு மற்றும் உடல்நலம் (WSH) கவுன்சில் பொது மேலாளர் கிறிஸ்டோபர் கோ கூறுகையில், “எல்லைகளை மீண்டும் திறப்பதன் விளைவாக நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை மேற்பார்வை செய்வதில் அதிக சவால்களை எதிர்கொள்கின்றன. பல நாடுகளில் இருந்து புதிய ஊழியர்கள் வேலைக்கு வருகின்றனர். ஆனால், அவர்கள் புதியவர்களாக இருப்பதால் பணி அனுபவம் அதிகம் தேவைப்படுகிறது

அதேசமயம், பெருந்தொற்று காரணமாக சிங்கப்பூரிலேயே முடங்கியிருந்த அனுபவம் வாய்ந்த ஊழியர்கள், நீண்ட காலமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருந்ததால், இப்போது அதிகளவில் வீட்டுக்கு கிளம்புகின்றனர். இதனால் நிறுவனங்கள் புதியவர்களை வைத்து வேலை வாங்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே இது ஒரு மனிதவளக் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது. இதனால் மேற்பார்வை திறனில் குறைபாடு ஏற்படுகிறது” என்று மேலாளர் கிறிஸ்டோபர் கோ கூறியுள்ளார்.

எனினும், பாதுகாப்புத் தரநிலைகள் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பெரியளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts