சிங்கப்பூரில் நேற்றுமுன்தினம் (ஜூன் 20) மாலை ஒரு பெண் மீது டாக்சி மோதியதில், சாலையில் சுமார் 20 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
Ang Mo Kio Street 21 இல் இரவு 10.25 மணியளவில், 61 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த Trans-Cab கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த பெண் மீது மோதி சுமார் மீட்டர் வரை தர தரவென இழுத்துச் சென்றது.
இதையடுத்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த துணை மருத்துவர் அவரது உடலை பரிசோதித்ததில், சம்பவ இடத்திலேயே அந்த பெண் இறந்துவிட்டது தெரியவந்தது.
இந்நிலையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக டிரான்ஸ்-கேப் டாக்ஸியின் 53 வயதான டிரைவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணைகள் நடந்து வருகின்றன.
Ang Mo Kio Street-ல் அந்த Cab டிரைவர் யு-டர்ன் எடுக்கும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தான் யாரையோ இடித்துவிட்டதை உணர்ந்த டிரைவர், வெளியே இறங்கி பார்த்த போது, அந்த பெண் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர் சாலையிலேயே அமர்ந்து அழுதிருக்கிறார்.
கைது செய்யப்பட்டாலும், அந்த டிரைவரை சமாதானப்படுத்த அவரது உறவினர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த டிரைவரை தேற்றினர். அதன் பிறகு, கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.