சிங்கப்பூரில் அண்மைக்காலமாக தடுப்புசி போட்டுக்கொள்ள மக்களை ஊக்குவிக்கும் பொருட்டு பல சலுகைளைக் பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு சிங்கப்பூரில் அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் “Max Perks With Vax” என்ற பெயரில் கோல்டன் வில்லேஜ் நிறுவனம் புதிய திட்டமொன்றை தொடங்கியுள்ளது. அதாவது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அதிக சலுகைகள் என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் அடிப்படையில் அங்கு படம் பார்க்க வருபவர்களில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு என்று பிரத்தியேகமாக தனி அரங்கு ஒதுக்கப்படுகிறது. அதில் குறிப்பிட்ட உணவுகளை வாங்குபவர்களுக்கு இலவசமாக பானங்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை இன்று (ஜூலை 16) முதல் இம்மாதம் 28ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்குறிப்பிட்ட சலுகைகள் எல்லாமே விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.