25 வயதான முத்தையா திருமுருகன், ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ஏசிஇ (FACE) நெட்வொர்க்குடன் இணைந்து தன்னார்வலராக தற்போது பணியாற்றி வருகிறார். நல்ல பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகள் குறித்து தனது சகாக்களுக்கு கர்ப்பிப்பதற்காக திரு தற்போது ஒரு FACE தன்னார்வலராகவும் Safe Distancing தூதராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
பணியிடத்திலும், தங்குமிடத்திலும் தனது சகாக்களுக்கு அவர் உதவுகிறார். அவர்கள் தங்குமிடத்தில் நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பதை உறுதிசெய்து, அவ்வப்போது அவர்களுக்கு எழுகின்ற சந்தேகங்களுக்கு பதிலும் அளித்து வருகின்றார்.
இதுகுறித்து பேசிய திரு “எனது சகாக்களுக்கு ஏதாவது உதவி தேவையா என்று கண்டுபிடிக்க நான் அடிக்கடி அவர்களுடன் உரையாற்றுவேன். முறையான நெறிமுறைகளைப் பின்பற்றி நம்மைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்றும் நான் அவர்களிடம் சொல்கிறேன். ஏனென்றால் நாம் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்போதுதான் நம் குடும்பங்களைச் சந்திக்க நம்மால் வீடு திரும்ப முடியும்” என்றார் அவர்.
அண்மையில் சிங்கப்பூரை கலக்கிய வெளிநாட்டு ஊழியர்களின் chill pannu mappi என்ற இணைய வழி நிகழ்வில் முத்தையா திருமுருகன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.