சிங்கப்பூரில் நேற்று ஏப்ரல் 17 அன்று மாலை குசு தீவில் உள்ள மலை உச்சியில் பெரிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பல வெடிப்புகள் கேட்ட நிலையில் வானை நோக்கி அடர்ந்த புகையும் காணப்பட்டது.
மூன்று மலாய் கோவில்கள் உள்ள இடத்தின் அருகே இந்த தீ விபத்து ய ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. குசு தீவில் மூன்று மலாய் கோவில்கள் மற்றும் ஒரு சீன கோவில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீவு சிங்கப்பூர் நில ஆணையத்தால் (SLA) நிர்வகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட அருகில் உள்ள லாசரஸ் தீவில் உள்ள மக்கள், நேற்று மாலை சுமார் 6.20 மணியளவில் இந்த தீ சம்பவம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். மேலும் தீ மளமளவென மளமளவென கோவில்களுக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவியது என்றும் அவர்கள் கூறினார்.
நல்வாய்ப்பாக, ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த கனமழையால் அந்த தீ அணைக்கப்பட்டது, இயற்கையோடு சிங்கப்பூர் SCDF படையும் இணைந்து தீயை அணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
நேற்று இரவு 7 மணியளவில் தீயணைப்புப் படகு வந்து சேர்ந்ததாகவும், கனமழை காரணமாக சுமார் 8 மணிக்குள் தீ குறைந்ததாகவும் நேரில் பார்த்த ஒருவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பெரும்பாலான பார்வையாளர்கள் மாலை 6:30 மணியளவில் வெளியேறியதால் தீ பரவிய நேரத்தில் அங்கு கூட்டம் இல்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொரு நபர் கூறினார். SCDF நள்ளிரவு வெளியிட்ட பேஸ்புக் பதிவில், அதன் கடல் மற்றும் நில அடிப்படையிலான தீயணைப்புப் படைகள் கடுமையான மழையின் போது தீயை அணைத்ததாக கூறினார்.