நமது சிங்கப்பூர் இந்த பெருந்தொற்றுடன் வாழ்வதில் நல்ல வகையில் முன்னேறி வருவதால், TraceTogether செயலியின் தேவை மற்றும் தடுப்பூசி-வேறுபட்ட பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை சுகாதார அமைச்சகம் (MOH) மதிப்பாய்வு செய்யும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் திங்கள்கிழமை (ஏப்ரல் 4) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நமது சிங்கப்பூரில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் பலதரப்பட்ட தளர்வுகளை சிங்கப்பூர் அரசு தொடர்ந்து வழங்கி வருகின்றது. இந்நிலையில் Contract Tracing செயலிகள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த சுகாதார அமைச்சர் ஓங், “Trace Together செயலின் தேவை தற்போது குறியானது வருவதாக” கூறினார்.
“MTF (பல-அமைச்சக பணிக்குழு) அதன் (Trace Together) பயன்பாட்டை மதிப்பாய்வு செய்யும் என்றும், இனி அது தேவைப்படாது என்று பட்சத்தில் அதை நிறுத்தவும் உத்தரவிடப்படும்” என்றும் அமைச்சர் கூறினார். அதேபோல மருத்துவமனைகளின் நிலைமையைப் பொறுத்து தடுப்பூசி-வேறுபட்ட பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சகம் மதிப்பாய்வு செய்யும் என்றும் திரு ஓங் கூறினார்.
“மருத்துவமனைகளின் நிலைமை சீராக மேம்பட்டு வருவதாக மிக உறுதியாக நாங்கள் நம்பும்போது, VDS (தடுப்பூசி-வேறுபட்ட பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகள்) முறையை மதிப்பாய்வு செய்வோம் என்றும். மேலும் VDS அமைப்புகளை குறைக்கலாமா? அல்லது முழுவதும் அகற்றலாமா? என்று பரிசீலிப்போம்,” என்றும் அவர் கூறினார்.
MOH, பொதுமக்களுக்கான (தொற்று) தொடர்புத் தடமறிதலுக்காக TraceTogetherஐ இனி நம்பியிருக்காது என்பதை திரு ஓங் சுட்டிக்காட்டினார். எது எப்படி இருந்தாலும் தற்போதுள்ள Trace Together மற்றும் VDS கட்டுப்பாடுகள் தொடரும் என்றும். இவை தேவையா? இல்லையா? என்பது மதிப்பாய்வு செய்த பிறகு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவோம் என்றும் அமைச்சர் கூறினார்.
“நாங்கள் SMMகளை (Safe Management Measures) எளிதாக்குகிறோம், மற்றும் நமது எல்லைகளை மீண்டும் திறக்கிறோம் என்பதால் நமது நெருக்கடி நிலை முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை” என்று அவர் மேலும் கூறினார். “உள்ளூர் மற்றும் உலகளாவிய நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், நமது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க எங்கள் பங்கைச் நிச்சயம் நாங்கள் செய்தே ஆகவேண்டும், மேலும் நமது வழியில் வரக்கூடிய சவால்களை சமாளிக்க தொடர்ந்து ஒன்றாகச் செயல்பட வேண்டும்” என்றார்.