TamilSaaga

மாறிப்போன Baggage.. Customer Careன் அலட்சியத்தால் கடுப்பான என்ஜினீயர்” : ஹாலிவுட் பட பாணியில் Indigo Airlines சர்வரை Hack செய்த இளைஞர்!

“Never Under Estimate the Power of the Common Man”, லுங்கி டான்ஸ் படம் அதாங்க நம்ம ஷாருக் கான் நடித்து வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படம் வெளியான பிறகு இந்த டயலாக் உலக லெவல் பிரபலம் என்றே கூறலாம். இந்நிலையில் அந்த வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சாதுவான என்ஜினீயர் கடுப்பாகி “ஹேக்கர்” அவதாரம் எடுத்துள்ளார்.

“சிங்கப்பூர் இதுவரை காணாத மிகப்பெரிய கியூ.. தள்ளுமுள்ளு, போட்டாபோட்டி என்று முண்டியடித்த மக்கள்” – Branding மேலிருந்த உச்சக்கட்ட மோகம்!

பாட்னா – மும்பை இடையே உள்ள இண்டிகோ விமான சேவை மூலம் பயணித்த நந்த குமார் என்ற பயணி (என்ஜினீயர்) விமான பயணம் முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது தான், தன்னுடன் கொண்டுவந்த பெட்டிகளில் ஒன்று வேறு ஒருவருடையது என்று தெரியவந்துள்ளது (ஒன்று போல இருந்ததால் வந்த சோதனை). சற்றும் தாமதிக்காமல் விமான நிலைய அதிகாரிகளுக்கு போன் செய்து தகவலை கூறியுள்ளார் அந்த இளம் பொறியாளர்.

இண்டிகோ நிறுவனமும் அவருடைய பெட்டியை மீட்டு தருவதற்கு ஒப்புக்கொண்டு அதற்கான வேலையில் இறங்கியுள்ளது. ஆனால் வெகு நாட்கள் ஆகியும் விமான நிறுவனத்தில் இருந்து எந்தவித Updateம் இல்லாத நிலையில் விரக்தி அடைந்துள்ளார் அந்த இளைஞர். தொடர்ச்சியாக பல முறை விமான நிலையத்தை அணுகியும் அவருக்கு மிச்சியது கண்டுபிடித்துவிடுவோம் என்ற பதில் தான்.

ஒரு கட்டத்தில் கடுப்பான இளைஞர் நீங்க என்ன எனக்கு ஹெல்ப் பண்றது, நானே இறங்குறேன்டா களத்தில் என்று குறி, இண்டிகோ Websiteயே ஹேக் செய்துள்ளார். பின் தனக்கு தேவையான தகவல்களை எடுத்துக்கொண்டு தனது பெட்டியை மாற்றி எடுத்துச்சென்ற நபரை தொடர்புகொண்டு என் பெட்டி உங்க கிட்ட இருக்கா? சரி உங்க பெட்டியும் என்கிட்ட தான் இருக்கு என்று பேசி இருவரும் பெட்டியை மாற்றிக்கொண்டுள்ளனர்.

சிங்கப்பூர் மலேசிய எல்லை.. சாலை நடுவே முழங்காலிட்டு, கண்ணீர் மல்க தாய் மண்ணை வணங்கிய மலேசியர் – இரண்டாண்டு ஏக்கம் தீர்ந்தது!

இறுதியில் இண்டிகோ நிறுவனத்தை ட்விட்டர் மூலம் தொடர்பு கொண்ட நந்த குமார், என்ன சார் உங்க வெப்சைட் நான் ஹேக் பண்ற அளவுக்கு மோசமா இருக்கு என்று கூற. அவர்களும் தங்கள் தவறுகளை திருத்திக்கொள்வதாக கூறியுள்ளனர். கடுப்பாக்கினால் சாமானியனுக்கு ஹேக்கர் ரேஞ்சுக்கு மாறுவார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts