TamilSaaga

“திறக்கப்பட்ட சிங்கப்பூர் மலேசிய எல்லை.. 7 மணிநேரத்தில் 11,000 பயணிகள்” : 2 ஆண்டுகளுக்கு பின் பல நம்பிக்கைகளோடு எல்லையை கடக்கும் பயணிகள்

இன்று ஏப்ரல் 1ம் தேதி சிங்கப்பூர் – மலேசிய நில எல்லை மீண்டும் திறக்கப்பட்ட முதல் ஏழு மணி நேரத்தில் மட்டும் சுமார் 11,000க்கும் மேற்பட்ட பயணிகள் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளை கடந்துள்ளதாக சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Exclusive : “ராணுவ ரகசியம் முதல் சாமானிய சிங்கப்பூரர் வரை.. அனைவரையும் பாதுகாக்கும் GAG Order” : இது சிங்கப்பூரின் மிகச்சிறந்த ஆயுதம் – ஏன்? சிறப்பு பார்வை!

சிங்கப்பூர் மலேசிய நில எல்லைகள் நள்ளிரவில் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் முதல் முறையாக, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்படாமலோ அல்லது பெருந்தொற்றுக்கு சோதனைகளைச் செய்யாமலோ இரு நாடுகளுக்கு இடையே சுதந்திரமாகச் செல்ல முடிந்தது பலருக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. தங்கள் சொந்தங்களை காண மக்கள் பெரும் ஆர்பரிப்போடு எல்லைகளை கடந்த காட்சிகள் காண்போரை நெகிழச்செய்தது.

எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கால்நடையாகப் பயணமாக செல்லவிருந்தவர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்ததாக ICA தெரிவித்தது. பெரும்பாலான மக்கள் தங்களுக்கான குடியேற்ற ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருந்தது தங்களுக்கு பேருதவியாக இருந்தது என்று ICA மேலும் கூறியது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக, குடியேற்ற அனுமதியும் சீராக இருந்தது என்றும் அதிகாலை 1 மணிக்கெல்லாம் வரிசைகள் எதுவும் இல்லாமல் மக்கள் செல்ல பாதைகள் சுலபமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.

சிங்கப்பூருக்கு இன்று முதல் வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. TraceTogether App-ல் 30 நாட்களுக்கு fully vaccinated status

ICA வெளியிட்ட தனது அறிக்கையில், சோதனைச் சாவடிகளுக்கு வருவதற்கு முன், பயணிகள் தங்கள் SG வருகை அட்டையைச் சமர்ப்பிக்கவும், தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை வைத்திருக்கவும் நினைவூட்டியது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் ஓட்டுநர்கள் செல்லுபடியாகும் வாகன நுழைவு அனுமதி, நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதல் மின்னஞ்சல் மற்றும் ஆட்டோபாஸ் அட்டை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்று ICA தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts