TamilSaaga

சிங்கப்பூர்.. பணியிடத்தில் நடந்த விபத்தால் சக்கர நாற்காலியில் முடங்கிய வாழ்க்கை – நல்ல உள்ளங்களின் உதவியோடு பங்குனி உத்திரத்தில் பங்கேற்ற மாரிமுத்து

சிங்கப்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த பங்குனி உத்திரம் திருவிழா, நேற்று (மார்ச்.18) வெகு விமர்சையாக நடைபெற்றது. சிங்கப்பூர் மட்டுமல்லாமல் அண்டை நாடான இந்தியாவின் தமிழகத்திலும் வெகு விமர்சையாக இந்த விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சிங்கப்பூரில் புகழ்பெற்ற Holy Tree Sri Balasubramaniar கோவிலில் பங்குனி உத்திரத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னதாகவே தடபுடலாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

“Boy Friend இருக்காரா?”.. 27 வயது பெண்ணுக்கு தனது நகைச்சுவையால் பாடம் புகட்டிய சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ – யாருமே பார்த்திராத அவரது “Sense of Humor”

இதுகுறித்து, Holy Tree Sri Balasubramaniar கோவில் சார்பில் அப்போது வெளியான தகவலில், முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பக்தர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் ஆலய நுழைவுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. நேற்று நடந்த இந்த விழாவில் பக்தர்கள் பலர் பங்கேற்ற நிலையில் MP Derrick அவர்களும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பக்தர்களும் பெரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிலையில் நேற்று ஸ்ரீ புனிதமரம் பாலசுப்பிரமணியர் கோவிலில் நடந்த விழாவின்போது 65 வயது நிரம்பிய கிருஷ்ணசாமி மாரிமுத்து அவர்களும் கலந்துகொண்டார். தமிழரான மாரிமுத்து சிங்கப்பூரில் கட்டட பாதுகாப்பு நிர்வாகியாக பணியாற்றி வந்தவர். கடந்த 2018ம் ஆண்டு பணியிடத்தில் நடந்த ஒரு விபத்தில் அவரது கால்கள் செயலிழந்து போனது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் யாரும் சரியாக கோவிலுக்கு வரமுடியாத நிலையில் நேற்று மாரிமுத்து அவர்கள் சாமி தரிசனம் செய்ய இல்லப் பணியாளரருடன் வந்தார்.

சிங்கப்பூரில் பாம்புபிடிக்க சென்ற வாலிபர் : “வேறொருவர் அலட்சியத்தால் வாலிபரை கொத்திய பாம்பு” – பொதுமக்களுக்கு அவர் தந்த விழிப்புணர்வு!

அவர் கோவிலுக்கு வந்த பிறகு ‘லோகா’ என்ற தொண்டூழியருடன் கோவிலில் அனைத்து இடங்களும் சென்று மனநிம்மதியோடு சுவாமி தரிசனம் செய்தார் மாரிமுத்து. உண்மையில் இதுபோன்ற தொண்டூழியர்களின் கருணையால் நான் இறைவனின் கருணையை உணர்கிறேன் என்று மனமுருகி தெரிவித்துள்ளார் அவர். தனக்கு உதவிய அந்த நல்ல உள்ளத்திற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts