TamilSaaga

“சிங்கப்பூரில் உறவுக்கார பெண் குளிப்பதை பார்க்க Spy Cam” : பொதுஇடங்களிலும் இதே வேலை – தலையில் தட்டி தூக்கிய சிங்கை போலீஸ்

சிங்கப்பூரில் கடந்த 2018ம் ஆண்டு தனது சொந்தகார பெண் ஒருவாறு வீட்டிற்கு மூன்று முறை சென்றிருந்தபோது, ​​அவரது குளியலறையில் உள்ள Brush ஸ்டாண்டில் பின்ஹோல் கேமராவுடன் கூடிய பேனாவைக் வைத்துள்ளார் அந்த வக்ர குணம் கொண்ட ஒரு நபர். அந்த நபரின் 30 வயது நிரம்பிய சொந்தகார பெண்கள் இருவர் Spy கேமரா பொருத்தப்பட்டிருந்த அந்த கழிப்பறையைப் பயன்படுத்துவதும், குளிப்பதும் எந்த கேமராவில் பதிவானது.

நடனமாடி Vote கேட்ட மாணவி.. கிரங்கிப் போன சிங்கப்பூர் சமூக வலைத்தளங்கள்.. குவிந்த ஓட்டுகள் – சாதித்து காட்டிய SAJC ஸ்டுடென்ட் “பிரியங்கா”

இந்நிலையில் 31 வயது மதிக்கத்தக்க அந்த நபர் இன்று திங்களன்று (மார்ச் 14) தன் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சத்துக்களை ஒப்புக்கொண்டார். மேலும் தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பு மேலும் ஆறு குற்றச்சாட்டுகள் பரிசீலனை செய்யப்பட்டது. Gag ஆர்டர் காரணமாக அந்த பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களும் குற்றவாளியின் பெயரும் நீதிமன்றத்தில் வெளியாகவில்லை. 16 முதல் 20 வாரங்கள் வரை சிறைத் தண்டனையை அரசு தரப்பு வாதம் கோரியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் அடுத்த மாதம் மீண்டும் நீதிமன்றத்திற்கு திரும்புவார்.

இதுவே முதல்முறை அல்ல…

அந்த உறவுக்கார பெண்கள் புகார் அளித்ததை தொடர்ந்து கைதான அந்த நபரின் வீட்டுக்கு போலீசார் சென்றபோது அவரிடம் இருந்த லேப்டாப், போன், ஹார்ட் டிரைவ், SD கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த நபரின் இரண்டு போன்களையும் தடயவியல் ஆய்வு செய்ததில், பாதிக்கப்பட்ட பல்வேறு பெண்களின் 16 வீடியோக்களை (அனைத்தும் கழிப்பறையில் எடுத்து) அவர் எடுத்தது தெரியவந்தது. நவம்பர் 2018 மற்றும் அக்டோபர் 2019க்கு இடையில் ஒரு பேக்கரி, ஷெங் சியோங் பல்பொருள் அங்காடி, அவரது அலுவலகம், ஒரு MRT நிலையம் மற்றும் பொதுப் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதுபோன்ற வீடியோக்களை பதிவு செய்ததாக ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூர் வரும் புலம்பெயர்ந்த மக்கள்.. “எங்களோடு ஒருவராக ஒன்றிணைந்து வாழுங்கள்” – பாசத்தோடு கூறிய சிங்கப்பூர் பிரதமர் லீ

வழக்கின்போது அந்த நபரை ஒரு IMH மனநல மருத்துவர் சோதித்து, உளவியல் ரீதியாக அவருக்கு பிரச்சனை இருப்பதாய் உறுதிப்படுத்தினார். ஆனால் தான் என்ன செய்கிறோம் என்பதை 100 சதவிகிதம் உணர்ந்தே அவர் இந்த குற்றங்களை செய்துள்ளார் என்றும் உறுதியளித்தார். கைதான அந்த நபர் அடுத்த மாதம் மீண்டும் கோர்ட்டில் ஆஜராவர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts