கனகசபை குணாளன் சிங்கப்பூரின் மிகப் பிரபலமான இந்திய ஓட்டப்பந்தய வீரராக திகழ்ந்தார். C. குணாளன் என்ற பெயரில் இவர் நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1964ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும், 1968ம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டார்.
1968 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், பந்தய தூரத்தை 10.38 வினாடிகளில் கடந்து தேசிய அளவில் சாதனை படைத்தார். சுமார் 33 ஆண்டுகளுக்கு இவருடைய சாதனையை முறியடிக்க படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1968 மற்றும் 69 ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது. 12 வருடங்களில் குணாளன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஐந்து பதக்கங்களும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 15 பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட தகவல்கள் சிங்கப்பூர் தேசிய நூலகம் வெளியிட்டது