கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 6) அறிவிக்கப்பட்ட தடுப்பூசி-வேறுபட்ட பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளுக்கு (VDS) இணங்குவதாக சிங்கப்பூர் முழுவதிலிருந்தும் பதினாறு காபி ஷாப் மற்றும் கேன்டீன் நடத்துநர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்று சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) தெரிவித்துள்ளது. SFA அளிக்கும் மூன்று விதமான VDS முறைகளில் இருந்து கையெழுத்திட்ட அந்த 16 காபி கடைகள் மற்றும் கேன்டீன்கள் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய முடியும்.
முதலில் VDS என்றால் என்ன?
Vaccination Differentiated Safe Management Measures – இதுதான் VDS என்று அழைக்கப்படுகிறது, சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் போடாதவர்களை பிரித்துப்பார்த்து சேவையளிக்கவே இது உருவாக்கப்பட்டது.
சரி இப்பொது மேற்குறிப்பிட்டுள்ள அந்த மூன்று வகை VDSகளை குறித்து காணலாம்..
Area Bound VDS
Time Bound VDS
Area and Time Bound VDS
Area Bound VDS என்றால் என்ன?
காஃபி ஷாப்கள் மற்றும் கேன்டீன்கள், Area Bound VDS முறையை தேர்ந்தெடுக்கும்போது ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள், முழுமையாக தடுப்பூசி போட்ட ஐந்து பேர் வரை குழுவாக அமர அனுமதிக்கலாம். அவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி சோதனைகளை செயல்படுத்த வேண்டும். அதேபோல அந்த குறிப்பிட்ட பகுதிக்கு அப்பால், ஒரு மேசைக்கு இரண்டு பேரை மட்டும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கலாம், மேலும் அவர்களுக்கு தடுப்பூசி சோதனையும் அவசியமில்லை.
Time Bound VDS என்றால் என்ன?
காஃபி ஷாப்கள் மற்றும் கேன்டீன்கள், Time Bound VDS முறையை தேர்ந்தெடுக்கும்போது, மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை மட்டும் தங்கள் கடையில் எங்கு வேண்டுமானாலும் தடுப்பூசி போட்ட ஐவர் வரை கொண்ட குழுவை அமர வைக்கலாம். இவர்களுக்கும் தடுப்பூசி சோதனை கட்டாயம். மேற்குறிப்பிட்ட அந்த நேரத்தை தாண்டி சேவை அளிக்கும்போது இருவரை மட்டுமே ஒன்றாக உணவுண்ண அனுமதிக்க வேண்டும்.
Area and Time Bound VDS
இறுதியாக காஃபி ஷாப்கள் மற்றும் கேன்டீன்கள் வரையறுக்கப்பட்ட மற்றும் குறிப்பிட்ட இடத்திற்குள் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 5 நபர்கள் வரை உணவருந்துவதற்கு இடமளிக்க முடியும் என்றால் அது தான் Area and Time Bound VDS.
அனைத்து வகை VDSன் ஒரே நோக்கம் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்த்து தடுப்பூசி போடாதவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பதே. இந்நிலையில் காபி கடை உரிமையாளர்களுக்கு இந்த நடவடிக்கை சிறந்த வணிகத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்றும் எங்களுடைய ஆள் பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்க அவை உதவும் என்றும் இந்த புதிய திட்டத்தை பற்றி தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பேசிய காஃபி ஷாப் சங்கங்கள் கூறின. சிங்கப்பூரில் 40 க்கும் மேற்பட்ட காபி கடைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஃபூச்சோ காபி உணவகம் மற்றும் பார் வணிகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் திரு. ஹாங் போ ஹின் பேசுகையில், Time Bond VDS முறை இனி காபி கடைகளில் பிரபலமாக இருக்கும் என்று கூறினார்.
இதேபோல், 631 Bedok Reservoir Road Nam Wah Coffeeshopல் உள்ள Fried Rice Story கடையின் இணை உரிமையாளர் திரு. ஹாரிஸ் மார்ட்டின் பேசுகையில் : “இந்த நாட்களில், பலர் காபி கடையில் சாப்பிடுவதற்குப் பதிலாக Take-Away எடுத்துச்செல்வதை தான் அதிகம் விரும்புகின்றனர். எனவே இங்குள்ள காபி ஷாப் VDSஐ செயல்படுத்தினாலும், அது எனது வணிகத்தை பாதிக்காது என்று நினைக்கிறன் என்று கூறியுள்ளார்.