இந்தியாவின் சந்தையும், உலக சந்தையும் வெவ்வேறு மாடல்களை கொண்டிருப்பவை. இந்தியாவில் வணிகம் செய்வது என்பது பொன்முட்டையிடும் வாத்து போன்றது. அறுக்க அறுக்க முட்டை வந்து கொண்டே இருக்கும். அதுவே உலக சந்தை என்ற கோணம் வேறு. அதை புரிந்து கொள்வது உண்மையில் எளிது. ஆனால், இந்திய சந்தையை புரிந்து கொள்வது கடினம். இங்கு எது ஒர்க் அவுட் ஆகும், எது போனியாகாது என்பதை கணிப்பது மிக மிகக் கடினம்.
அந்த வகையில், வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு பொருள், இந்தியாவில் இன்றும் விற்கப்பட்டு வருகிறது. அதுவும் மிக பிரபலமான பொருளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி விற்கப்படும் பொருட்களின் லிஸ்ட் என்னென்ன? இந்த செய்தியில் பார்க்கலாம்.
தேன்
இந்திய மக்களிடையே “டாபர், ஹிமாலயா” போன்ற பிராண்டுகளின் பெயர்கள் மிகப் பிரபலமானவை. ஆனால், இந்த பிராண்டுகளின் தேன் மாசுபட்டது என்று 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தி ஹிந்து’-வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிராண்டுகளின் தேன்களில் நடத்தப்பட்ட சோதனையில், 10-க்கும் மேற்பட்ட மாதிரிகளில் மிகவும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இருப்பது கண்டறிப்பட்டது. இதனால், வெளிநாடுகளில் இந்த பிராண்டுகளின் தேன் விற்பனை செய்ய அனுமதியில்லை. ஆனால், இந்தியாவில் ஜெகஜோராக விற்கப்பட்டு வருகிறது.
Chyawanprash
இந்தியாவில் தயாரிக்கப்படும் மிக பிரபலமான பிராண்டு இது. கடந்த 2005ம் ஆண்டே கனடா அரசு இதற்கு தடை விதித்துவிட்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? அதில் ஈயம் மற்றும் பாதரசம் அதிகம் இருக்கிறதாம். அப்படி சொல்லித் தான் கனடா அதற்கு தடை விதித்துள்ளது.
Vicks Action 500
D-Cold, Vicks Action 500, Enteroquinol, Analgin, Syspride போன்ற பல மருந்துகள் பல வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. இதில் Vicks Action 500 இந்தியாவிலும் சில காலத்துக்கு தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் மீண்டும் விற்பனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
பூச்சிக்கொல்லிகள்
இந்தியாவில் விற்கப்படும் சுமார் 70 வகையான பூச்சிக்கொல்லி பொருட்களுக்கு வெளிநாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Haldiram’s
ஹல்டிராம்ஸ் ஸ்நாக்ஸ் பொருட்கள் இந்தியாவில் மிக மிக பிரபலம். இந்தியாவின் ஒரு மாலிகைக் கடைகளில் கூட இதன் ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் இல்லாமல் நீங்கள் பார்க்க முடியாது. ஆனால், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்த நிர்வாகம் இந்தியாவில் தயாரிக்கப்படும் Haldiram’s ஸ்நாக்ஸ் பொருட்களை விற்பனை செய்வதற்கும் இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்துள்ளது. ஏனெனில், Haldiram’s பிஸ்கட், மற்றும் வேறு சில பண்டங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டது.
எனினும், அமேசானின் உலகளாவிய விற்பனைத் திட்டத்தின் மூலம் ஹால்டிராம்கள் இப்போது அமெரிக்காவில் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஹால்டிராம்ஸைப் பொறுத்தவரை, அமெரிக்கா ஏற்கனவே ஒரு பெரிய சந்தையாக இருந்தது, அதன் வருடாந்திர வருவாயில் ஆஃப்லைன் ஏற்றுமதியிலிருந்து 40% வரை கிடைத்தது.
Lifebuoy soap
Lifebuoy தோலுக்கு தீங்கு விளைவிக்கும் சோப்பாக கருதப்படுவதால் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க மக்கள் சில குறிப்பிட்ட விலங்குகளை குளிப்பாட்ட இதனை பயன்படுத்துகின்றனர். எனினும், இது சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யத் தவறியதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
ஜெல்லி மிட்டாய்கள்
அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஜெல்லி மிட்டாய்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் இவை குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பெரும்பாலான பெட்டிக் கடைகளில் இந்த ஜெல்லி மிட்டாய்கள் கிடைக்கின்றன.
Red Bull
Energy drink என்று சொல்லப்படும் Red Bull பிரான்ஸ் மற்றும் டென்மார்க்கில் தடை செய்யப்பட்டுள்ளது. லிதுவேனியாவில், 18 வயதிற்குட்பட்டவர்களுக்கும் அதன் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த பானம் மாரடைப்பு, நீரிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் வலிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது என்று பிரான்ஸ் மற்றும் டென்மார்க் நம்புகிறது. ஆனால் இந்தியாவில் இந்த பானத்தை எளிதாக வாங்கலாம்.
Nimulid
அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவைத் தவிர, பல நாடுகளில் இந்த வலி நிவாரணி அதிகாரப்பூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது, ஏனெனில் இது கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். இந்தியாவில் இது எளிதாகக் கிடைக்கிறது.
Kinder Joy
அமெரிக்காவில், Kinder Joy சாக்லேட் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று அதன் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. இதை நீங்கள் அமெரிக்காவில் எடுத்துச் சென்றால், $2,500 வரை அபராதம் விதிக்கப்படலாம்.