SINGAPORE: 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 10 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக Health Sciences Authority (HSA) இன்று (பிப்ரவரி 23) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடுமையான பக்க விளைவுகளில் வலிப்புகள், குடல் அழற்சி, இரத்த அழுத்தம் குறைதல், ஒவ்வாமை எதிர்வினைகள், அசாதாரண சிறுநீரக செயல்பாடு மற்றும் சிறிய இரத்த நாளங்களின் வீக்கம் ஆகியவை அடங்கும் என்று HSA கூறியுள்ளது.
அதே சமயம் மயோர்கார்டிடிஸ் அல்லது பெரிகார்டிடிஸ் பாதிப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்று HSA கூறியுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட பிறகு சில சமயங்களில் இதயம் தொடர்பான சிக்கல்களை உருவாக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் அப்படி எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 31 வரையிலான தரவுகளை கொண்ட HSA-ன் இன்றைய அறிக்கையில், இதே 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 280 பேருக்கு தீவிரம் இல்லாத பக்க விளைவுகள் பதிவாகியுள்ளதாக HSA கூறியுள்ளது.
அதாவது முக வீக்கம், காய்ச்சல், சொறி, மார்பு அசௌகரியம், படபடப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பக்கவிளைவுகள் குழந்தைகளிடையே தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளிடையே ஏற்பட்டிருக்கும் இந்த பக்க விளைவுகள், teenagers மற்றும் பெரியவர்களிடையே காணப்படுவதைப் போலவே உள்ளன. 0.12 சதவீத அளவுகளில் தீவிரம் இல்லாத பக்க விளைவுகள் ஏற்படுகின்றன, மேலும் 0.004 சதவீத அளவுகளில் தீவிர பக்க விளைவுகள் காணப்படுகின்றன.
சிங்கப்பூர் கடந்த ஆண்டு டிசம்பர் 27 அன்று ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஜனவரி 31 வரை இந்த வயதினருக்கு மொத்தம் 238,253 டோஸ்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் ஒவ்வொரு விஷயத்திலும் மருத்துவப் பிரச்சனைகளுக்கு தடுப்பூசி போடுவது காரணமாக இருந்திருக்காது என்று HSA கூறுகிறது. “இந்த பக்க விளைவுகள், அந்த குழந்தைகளின் கண்டறியப்படாத நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம் அல்லது தடுப்பூசி போடப்பட்ட அதே நேரத்தில் அவை நிகழ்ந்தது தற்செயலாக இருக்கலாம்.” என்கிறது.
3.19 மில்லியனுக்கும் அதிகமான பூஸ்டர் ஜப்ஸ் செலுத்தப்பட்டிருக்கும் நிலையில், பக்க விளைவுகளின் எண்ணிக்கையில் எந்த அதிகரிப்பும் இல்லை என்பதையும் HSA குறிப்பிடுகிறது.
Pfizer-BioNTech/Comirnaty ஆகிய தடுப்பூசியின் பூஸ்டர் ஷாட்ஸ்களால் ஏற்பட்ட 553 பக்க விளைவுகள் பற்றிய அறிக்கையையும், Moderna/Spikevax தடுப்பூசியுடன் இணைக்கப்பட்ட மற்றொரு 289 அறிக்கைகளையும் HSA வெளியிட்டுள்ளது.
இதில், கடுமையான பக்க விளைவுகளின் 73 அறிக்கைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் 15 பாதிப்புகள் மாரடைப்பு மற்றும் பெரிகார்டிடிஸ் ஆகும்.
ஜனவரி மாத இறுதியில், சிங்கப்பூர் 9.8 மில்லியன் டோஸ் ஃபைசர் தடுப்பூசியை வழங்கியுள்ளது. இதில், 12,770 தீவிரமற்ற பக்க விளைவுகள் மற்றும் 664 தீவிர பக்க விளைவுகள்ஏற்பட்டுள்ளன.
மாடர்னா தடுப்பூசியின் 2.9 மில்லியன் டோஸ்களை சிங்கப்பூர் வழங்கியது. இதில் 2,885 தீவிரமற்ற பக்க விளைவுகள் மற்றும் 156 தீவிர பக்க விளைவுகளை கொண்டுள்ளன.
சினோவாக்-கொரோனாவாக் மற்றும் சினோஃபார்ம் தடுப்பூசிகள் போன்ற எம்ஆர்என்ஏ அல்லாத ஜாப்கள் குறித்த updates-களையும் HSA அளித்துள்ளது.
சிங்கப்பூர் இன்றுவரை 369,083 சினோவாக் தடுப்பூசியை செலுத்தியுள்ளது. இதில், 299 தீவிரமற்ற பக்க விளைவுகள் மற்றும் 22 தீவிர பக்க விளைவுகளை கொண்டுள்ளன.
அதேபோல், Sinopharm தடுப்பூசியின் 89,350 டோஸ்கள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. இதில் 41 தீவிரமற்ற பக்க விளைவுகள் மற்றும் ஆறு தீவிர பக்க விளைவுகளும் பதிவாகியுள்ளன.