TamilSaaga

“இந்திய MP-க்கள் பாதிபேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள்…” – சிங்கப்பூர் பிரதமர் லீ-யின் கருத்துக்கு இந்தியா கடும் எதிர்வினை – ஆட்டம் காணும் “நட்பு”

“நேருவின் இந்தியா” என்பது குறித்த சிங்கப்பூர் பிரதமரின் கருத்துகளையும், இந்திய எம்.பி.க்கள் பற்றிய அவருடைய குற்றப் பதிவுகளையும் இந்தியா கடுமையாக சாடியுள்ளதாக இந்தியாவில் இருந்து NDTV செய்தி வெளியிட்டுள்ளது.

“சிங்கப்பூர் பிரதமரின் கருத்துக்கள் தேவையற்றவை. நாங்கள் சிங்கப்பூர் தரப்பிடம் இந்த விஷயத்தை எடுத்துச் செல்வோம்” என்று இந்திய அரசாங்க வட்டாரங்கள் கூறியதாக NDTV பதிவிட்டுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் தூதரை அழைத்து தனது ஆட்சேபனையை தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயகம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற காரசார விவாதத்தின் போது நமது சிங்கப்பூர் பிரதமர் லீ இந்தக் கருத்தை பதிவு செய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மேலும் படிக்க – “வாடிக்கையாளர்கள் பற்றவைத்த நெருப்பு”.. சிங்கப்பூரில் ‘இனி கூடுதல் கட்டணம் கிடையாது’ என்று பின்வாங்கிய Visa Credit Card – செம!

அதாவது, சிங்கப்பூரில் தொழிலாளர் கட்சியின் எம்.பி ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த சூழலில் குற்றம் நிரூபிக்கப்பட அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், “சுதந்திரம் பெற போராடி வென்ற தலைவர்கள், மிகப்பெரும் தைரியம், மகத்தான கலாசாரம் மற்றும் தலைசிறந்த திறன் கொண்ட தலைவர்களாக வெளிப்பட்டனர். அவர்களில் டேவிட் பென்-குரியன்ஸ், ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் மிக முக்கியமானவர்கள்.

ஒரு நாட்டை உருவாக்க நினைக்கும் தலைவர்கள், தங்கள் மக்களுக்கும் தங்கள் நாட்டுக்கும் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், தங்கள் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும் முயற்சி செய்கின்றனர். ஆனால், அந்த ஆரம்ப உத்வேகத்தை, அடுத்தடுத்து வரும் தலைமுறையினர் தக்க வைப்பதில்லை.

காலப்போக்கில் அரசியலின் அமைப்பே மாறுகிறது. அரசியல்வாதிகள் மீதான மரியாதை குறைகிறது. இதனால், வாக்காளர்களும் இதுதான் விதிமுறை என்று நினைத்துக் கொள்கிறார்கள். நம்பிக்கை சீரழிந்து, சிதைந்து, நாடு இன்னும் அதிகம் வீழ்ச்சியடைகிறது.

“நேருவின் இந்தியா”வில் ஊடக அறிக்கைகளின்படி தற்போது, லோக் சபாவில்.. அதாவது இந்திய மக்களவையில் கிட்டத்தட்டப் பாதி எம்.பி-க்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் பல அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றாலும், இன்னும் இதே நிலைதான் நீடிக்கிறது.

மேலும் படிக்க – சிங்கப்பூரின் Redhill, Tiong Bahru MRT நிலையங்களுக்கு அருகில் காத்திருக்கும் “சர்பிரைஸ்” – மே மாதம் தொடக்கம் – கைப்பற்ற முண்டியடிக்கும் மக்கள்

எனவே, இனி வரும் அடுத்த தலைமுறையினர் ஒவ்வொருவரும் சிங்கப்பூர் மரபுரிமையாக பெற்ற அமைப்பைப் பாதுகாக்க வேண்டும். இதற்கு நாம் முதலில் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும், விதிகளைச் சரியாகச் செயல்படுத்தவேண்டும், அதே விதிகளை அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்த வேண்டும், யாரும் சட்டத்திற்கு மேல் இல்லை என்பதை இங்கு உறுதிப்படுத்தியே ஆக வேண்டும்” என்று கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

இந்த சூழலில் தான், இந்திய எம்.பி.க்கள் குறித்த சிங்கப்பூர் பிரதமரின் கருத்துகளை இந்தியா கடுமையாக சாடியுள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts