TamilSaaga

சிங்கப்பூரில் இத்தனை வருடங்களாக இருந்த விடுமுறை முறையை மாற்றும் MOM – “Sick Leave”-க்கு வரும் சிக்கல் – அமைச்சர் அறிவிப்பு

SINGAPORE: பணியாளர்கள் இனி “sick leave” எடுக்காமல் இருப்பதற்கான ஊக்கத் தொகை திட்டங்கள் “இனி நியாயமான நியாயமான நடைமுறையாகக் கருதப்படக்கூடாது” என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் திங்களன்று (பிப். 14) கூறினார்.

இதுபோன்ற முறையில் ஊழியர்களை மதிப்பிடுவது அல்லது ஊதியம் வழங்குவது நியாயமான வேலைவாய்ப்பு நடைமுறைகள் (TGFEP) தொடர்பான முத்தரப்பு வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்பதை அவர் “தெளிவுபடுத்தியுள்ளார்”.

மாதாந்திர வேலை ஊக்கத்தொகையை (monthly work incentive) இழக்க விரும்பாததால், கோவிட்-19 ஸ்வாப் பரிசோதனையை மறுத்ததற்காக pest control technician ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, மருத்துவ விடுப்பு எடுக்காத தொழிலாளர்களுக்கான ஊக்கத்தொகை சமீபத்தில் செய்தியாக வெளிவந்தது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் PCM Permit-ல் ITI, Mechanical படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – 10 நபர்கள் மட்டும் தேவை

ஏ ரஹீம் எம் தாஹா என்ற 60 வயது முதியவருக்கு மூன்று வாரங்களாக இருமல் இருந்தது. இதனால் அவர் ஸ்வாப் பரிசோதனை செய்து வீட்டில் இருக்குமாறு மருத்துவர் கூறினார். ஆனால் அவர் அடுத்த நாள் வேலைக்குச் சென்று ஐக்கியமாகிவிட்டார். அதுமட்டுமின்றி, வேலை தொடர்பாக ஐந்து வெவ்வேறு இடங்களுக்கும் சென்றிருக்கிறார்.

pest control company-ல், ரஹீம் மாதம் 1,500 S$ அடிப்படைச் சம்பளத்துக்கு வேலை செய்துள்ளார். அந்த மாதத்தில் மருத்துவ விடுப்பு எடுக்காமல் இருப்பது உட்பட சில நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்தால், அவருக்கு கூடுதலாக S$100 allowance வழங்கப்படும். இந்த தொகையை தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர் தன் உடலை சோதனை செய்யக் கூட ஒப்புக்கொள்ளவில்லை என்பதே பிரச்சனை.

“இத்தகைய திட்டங்கள் காலப்போக்கில் தவறான நடத்தையைத் தடுக்கவும், அதாவது ஊழியர்கள் தேவையில்லாமல் விடுப்பு எடுப்பதைத் தவிர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டவை தான். ஆனால் மூவரது tripartite partners இந்த Attendance தொடர்பான திட்டத்தை வேறு மாதிரியாக பார்க்கிறது. அதாவது, ஊழியர்களின் உடல் நலம் என்கிற திசையில் இதை பார்க்கிறது” என்று அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.

மனிதவள அமைச்சகம் (MOM), தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) மற்றும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (SNEF) ஆகியவை tripartite partners என்று அழைக்கப்படுகிறது.

“இது சிங்கப்பூரின் புதிய அடையாளம்” : 280 மீட்டர் உயரத் தோட்டம், சைக்கிளிங் – பிரமிப்பூட்டும் CapitaSpring கட்டிடம்

தொடர்ந்து பேசிய அமைச்சர், “கொள்கையின்படி, ஒரு ஊழியர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவர் மருத்துவ உதவியை நாட வேண்டும், முதலில் தனது சொந்த நலனுக்காகவும், இரண்டாவதாக, சக ஊழியர்களின் நலனுக்காகவும்” என்றார்.

“வருகை ஊக்குவிப்புத் திட்டங்கள், விடுப்பு எடுப்பதைத் தடுக்க உதவினாலும், அது தொழிலாளர்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான அடிப்படைக் கொள்கைக்கு முரணானது. Tripartite partners இந்த திட்டங்களைக் கொண்ட நிறுவனங்களுடன் திட்டங்களை மறுசீரமைக்க பணியாற்றி வருகின்றன என்று அமைச்சர் கூறியுள்ளார்.

“நாங்கள் நிறுவனங்களை மதிப்பாய்வு செய்து தேவையான இடங்களில் மாற்றங்களைச் செய்ய சிறிது காலம் அனுமதிப்போம். அடுத்த ஆண்டு முதல், இது போன்ற திட்டங்கள் TGFEP க்கு முரணானது என்பது மிகத் தெளிவாகத் தெரியும்,” என்றும் தெரிவித்துள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts