TamilSaaga

கொரோனா தொற்றால் வருவாய் இழந்த சிங்கப்பூர் வர்த்தகங்கள்.. சம்பள ஆதரவளிக்கும் அரசு

சிங்கப்பூரில் கொரோனா தாக்கத்தின் காரணமாக பல்வேறு வர்த்தகங்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 வாரங்கள் சம்பள ஆதரவு வழங்குவதாக அமைச்சுகளுக்கான பணிக்குழு அறிவித்துள்ளது.

50 சதவீதம் சம்பள ஆதரவானது, உணவு மற்றும் பானக் கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் கலைக் குழுக்கள் ஆகியவற்றுக்கு வருகின்ற ஜூன் 21ம் தேதி முதல் வழங்கப்படும்.

அதே போல் 30 சதவீதம் சம்பள ஆதரவு என்பது சில்லரை வர்த்தகம் செய்பவர்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், வரலாற்று தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் போன்றவற்றிற்கு வழங்கப்படும்.

உணவு கடை மற்றும் நிலையங்களுக்கு வாடகை தள்ளுபடி போன்ற ஆதரவுகள் தொடரும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் இந்த சலுகைகள் பற்றிய முழு விவரங்களும் தேசிய சுற்றுப்புற அமைப்பு விரைவில் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்கு இந்த சலுகைகள் உதவிக்கரமாக அமையும் என நம்பப்படுகிறது.

Related posts