உலகில் நிலவும் இந்த கோவிட்-19 சூழ்நிலைக்கு மத்தியில், வணிகத்தின் தொடர்ச்சியை உறுதிசெய்ய தொழிலாளர்கள் தங்கள் சிங்கப்பூர் நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் நேற்று (பிப். 4) வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த “கடினமான காலங்களில்” முதலாளிகள் தங்கள் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் அக்கறையையும் நலனையும் காட்ட வேண்டும் – அவர்களின் தியாகங்கள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்து அதற்கேற்ப வெகுமதிகளை வழங்க வேண்டும் என்று MOM தெரிவித்துள்ளது.
Omicron மாறுபாட்டின் அதிக பரவல் காரணமாக சிங்கப்பூர் “நோய்த் தொற்றின் அதிகரிப்புக்கு” தயாராக இருக்க வேண்டும். COVID-19 காரணமாக ஊழியர்கள் இல்லாதது வணிக நடவடிக்கைகளை “குறிப்பிடத்தக்க வகையில் சீர்குலைக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் Multi-Ministry Task Force நிறுவனங்களின் முதலாளிகளுக்கு, குறிப்பாக அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்கள், தங்கள் வணிகத் தொடர்ச்சித் திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்தத் தயாராக இருக்கவும், பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும், ஊழியர்கள் தங்களைத் தாங்களே அடிக்கடி பரிசோதிக்க ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது
இந்த கொரோனா சூழலில், சிங்கப்பூர் நிறுவன முதலாளிகள் தங்கள் தொழில் வளர்ச்சி தொடர்பான திட்டங்களை மதிப்பாய்வு செய்யும் போது, முதலாளிகள் கருத்தில் கொள்ள விரும்பும் நடவடிக்கைகளை இந்த ஆலோசனை வகுத்துள்ளது.
ஸ்பிலிட் டீம்கள், கூடுதல் ஊதிய விடுப்பு
நிறுவன செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்காக முக்கியமான செயல்பாடுகளை நிறைவேற்றும் ஊழியர்களுக்காக, split teams முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதலாளிகளுக்கு MOM அறிவுறுத்தியுள்ளது. நிறுவனத்தில் உள்ள மற்ற ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுவதால், ஒருவேளை சக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அவர்கள் தேவைக்கேற்ப மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள்.
Split Teams என்றால் என்ன?
Split Teams என்பது அங்கு பணியாளர்கள் வெவ்வேறு குழுக்களுக்கு (எ.கா., குழு A மற்றும் குழு B) நியமிக்கப்பட்டு, மாற்று நாட்களில் அல்லது வெவ்வேறு வேலைத் தளங்களில் அலுவலகத்தில் பணிபுரியுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள். சமூக இடைவெளியை பராமரிக்க, நிறுவனம் தங்கள் ஊழியர்களை “A” மற்றும் “B” குழுக்களாகப் பிரித்து வேலை செய்ய வைப்பது Split Teams எனப்படுகிறது.
மேலும் முக்கிய வணிகச் செயல்பாடுகளுக்கு முக்கியமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால், நிறுவனம் தற்காலிகமாக செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்தால், முதலாளிகள், தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து விடுப்பு மற்றும் சம்பள ஏற்பாடுகள் குறித்த நிறுவனக் கொள்கையை உருவாக்கலாம் என்று MOM கூறியுள்ளது.
கூடுதல் ஊதிய விடுப்பு, ஊதியத்துடன் கூடிய paid sick அல்லது வருடாந்திர விடுப்பு போன்றவற்றை அமைச்சகம் அத்தகைய ஏற்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாக பட்டியலிட்டுள்ளது.
நிறுவனங்கள் விடுமுறை மற்றும் வணிக இடையூறுகளால் எழும் சம்பள விஷயங்களில், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளுக்கு அதிகப்படியான Manpower மற்றும் பொறுப்பு ஆட்குறைப்பு (TAMEM) பற்றிய Tripartite Advisory-யை பெறலாம்.
இந்த Tripartite Advisory-யானது, சிங்கப்பூர் இந்த காலகட்டத்தில் அதிகரித்துள்ள தினசரி பாதிப்புகளை கையாள்வதால், முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் இருவரும் தொடர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. சில சந்தர்ப்பங்களில், சில ஊழியர்கள் தங்கள் சக ஊழியர்கள் இல்லாததை ஈடுகட்ட அதிக மணிநேரம் ஒதுக்குமாறு கோரப்படுவார்கள் என்று MOM குறிப்பிட்டுள்ளது.