TamilSaaga

“உதவி செய்ய சென்றால் மேலே சிறுநீர் கழித்தார்” : சிங்கப்பூரில் அதிகமாகிறதா? SCDF பணியாளர்கள் மீதான சில பொதுமக்களின் தாக்குதல்?

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) சிங்கப்பூரில் உள்ள மக்களுக்கு தீயணைப்பு மற்றும் அவசர மருத்துவச் சேவைகள் உட்பட மிகவும் தேவையான உதவிகளை ஓய்வின்றி தொடர்ந்து வழங்கி வருகின்றது என்பது நாடறிந்தது. இருப்பினும், SCDF படையின் அவசரகால பணியாளர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது வாய்மொழி மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் அவலம் நடந்துகொண்டு தான் உள்ளது.

சிங்கப்பூரில் Construction துறையில் வேலை வாய்ப்பு : 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவை – முழு விவரம்

SCDF அதிகாரிகளுக்கு எதிரான உடல் மற்றும் வாய்மொழி ரீதியான துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 2021ல் அதிகரித்தது என்று அதிர்ச்சி தகவலும், இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக அதிக அளவு என்றும் கூறப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) வெளியான ஒரு செய்திக்குறிப்பில், 2021ம் ஆண்டில், அவசரகால பணியாளர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றும் போது 29 வாய்மொழி மற்றும் அல்லது உடல் ரீதியான துன்புறுத்தல் வழக்குகளை எதிர்கொண்டதாக SCDF தெரிவித்துள்ளது. இது 2020ம் ஆண்டிலிருந்து 12 வழக்குகளின் அதிகரிப்பை கண்டுள்ளது.

2016 மற்றும் 2021ம் ஆண்டுக்கு இடையில் ஆண்டுக்கு சராசரியாக 23 வழக்குகள் என மொத்தம் 140 வழக்குகள் பதிவாகியுள்ளதாக SCDF கூறியது. கடந்த ஜூலை 21, 2020 அன்று, ஒரு அவசர தேவைக்காக புறப்பட ஆம்புலன்ஸ் குழுவினர் பாதிக்கப்பட்டவரை அணுகி அவரைப் பற்றிய மேலும் சில மருத்துவ மதிப்பீட்டைத் தொடங்கவிருந்தபோது அந்த நோயாளி ஆக்ரோஷமடைந்துள்ளார். உதவிக்குழுவினரை சண்டைக்கு அழைத்ததோடு, பொதுவெளியில் தனது கால சட்டையை கழற்றி குழு உறுப்பினரின் வலது காலணியில் சிறுநீர் கழித்துள்ளார். பின்னர் அந்த நோயாளிக்கு 12 மாதங்கள் மற்றும் மூன்று வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதேபோல செப்டம்பர் 3, 2020 அன்று, ஒரு நோயாளி திடீரென ஆக்ரோஷமாகி, பெண் ஆம்புலன்ஸ் குழு உறுப்பினர் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டார். அந்த பெண் உறுப்பினர் மார்பில் அடி விழுந்த நிலையில், அந்த நோயாளி அவர் மேல் எச்சில் துப்பவும் முயன்றுள்ளார். அந்த நோயாளிக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரின் அவசரகால சிகிச்சைப் பணியாளர்களின் அன்றாடப் பணியை பெரும்பான்மையான பொதுமக்கள் பாராட்டுகின்றனர் என்று SCDFன் அவசரகால மருத்துவ சேவைகள் இயக்குநரும் உதவி ஆணையரும் யோங் மெங் வா தெரிவித்தார்.

“பெருந்தொற்று கட்டுப்பாடுகளை தளர்த்தும் வலுவான நிலையில் சிங்கப்பூர்” : வல்லுநர்கள் அறிவிப்பு – ஆனால் NO சொல்லும் WHO

எவ்வாறாயினும், துரதிர்ஷ்டவசமாக ஒரு சில மக்கள் அவர்களை வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்துகிறார்கள் என்று அவர் கூறினார். அவர் நடத்தைகளை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறிய அவர், மேலும் அவை நோயாளிகளின் முன்-மருத்துவமனை பராமரிப்பு நிர்வாகத்திற்கு இடையூறாக இருக்கலாம் என்றும் கூறினார். நமக்காக உயிரையும் துச்சமென மதித்து செயல்படும் அவர்களை நல்ல முறையில் கவனித்துக்கொள்வது நமது கடமை என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts