ஆதிகாலம் முதலே மனித வாழ்க்கையில் தடுப்பூசி என்பது எப்போதும் இருந்துவரும் ஒன்றுதான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த டிஜிட்டல் உலகம் கண்டிராத ஒரு தொற்று நோய் நம்மை தற்போது ஆட்கொண்டுள்ள நிலையில் இப்போதும் தடுப்பூசி தான் ஒரே தீர்வாக உள்ளது. உலக முழுவதும் பல்லவேறு நாடுகள் பல தடுப்பூசிகளை கண்டறிந்து மக்களுக்கு செலுத்து வருகின்றது. இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் போன்ற தடுப்பூசிகள் தற்போது பொதுமக்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டு வருகின்றது. மருத்துவ கரணங்கள் இருப்பர்வர்களை தவிர அரசு குறிப்பிட்ட அனைத்து வயதினரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் WHO பரிந்துரைத்துள்ள தடுப்பூசிகள் அனைத்து நாடுகளாலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் இங்கு நமது சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டவர்கள் அவர்கள் இந்தியா திரும்பிய பிறகும் அந்த சான்றிதழின் நகலை எடுத்துக்கொள்ளலாம். அதற்கான வழிகளை தற்போது காணலாம். இதற்கு நீங்கள் முதலில் இந்த லிங்கை கிளிக் செய்யவேண்டும். இந்த லிங்க் உள்ளே சென்ற பிறகு நீங்கள் உங்கள் Sing Pass அல்லது பாஸ்போர்ட் எண்ணை வைத்து நீங்கள் log in செய்துகொள்ளலாம்.
அதன் பிறகு உங்கள் பிறந்த தேதி, சிங்கப்பூரில் நீங்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நாள், உங்களுடைய மின்னஞ்சல், என்ன தடுப்பூசி எடுத்துக்கொண்டார்கள் போன்ற விவரங்களை பதிவு செய்த பிறகு மின்னஞ்சலுக்கு வரும் OTP மூலம் மக்கள் அவர்களுடைய தடுப்பூசி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். நிச்சயம் பல தருணங்களில் இந்த எளிய சேவை நமக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.